இந்தியாவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் ஒப் இந்தியா என்ற சஞ்சிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுநலவாய மாநாட்டை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தில் தனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்திருந்தார். இப்போது 180 பாகையில் நேரெதிராக சுமந்திட மாநாட்டை ஆதரிக்கவில்லை என்கிறார்.
மக்கள் மத்தியிலிருந்து எழும் எதிர்ப்பலைகளை எதிர்கொள்வதற்காக சுமந்திரன் மாநாட்டை எதிர்க்கிறோம் என்று உறக்கம் கலந்தத அறிக்கை வெளியிட்டிருந்தாலும் அதற்கான காரணமும் கவனமாகவே தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘நாட்டின் பிரதம நீதியரசரை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைக்கு விரோதமான முறையில் பணி நீக்கம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.’ ஆக இனப்படுகொலை, போர்க்குற்றம் இத்தியாதிகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு பிரதம நீதியரசர் பிரச்சனையை மட்டும் முன்னிலைப்படுத்துகிறார்.
பொதுநலவாய மாநாடு பிரித்தானியத் துருப்புக்களின் பாதுகாப்பில் ஆப்கானில் அவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளின் புதை குழியில் நடைபெற்றாலும் மக்கள் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. பொது நலவாய மாநாட்டை ஆதரிக்கிறோம் எதிர்க்கிறோம் என்ற அதிகார வர்க்க எடுபிடிகளின் முரண்பாட்டுக்குள் நசுக்கப்படுவது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டம் என்பதே இங்கு குறித்துக்கொள்ளப்பட வேண்டியது.