Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

Sri Lanka Commonwealthபொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23வது உச்சிமாநாடு இன்று கொழும்பு மாநகரில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. கொழும்பு, மஹிந்த ராஜபக்ச தாமரைத் தடாகம் அரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது.
இதனையிட்டு, கொழும்பு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வீதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் தேசியக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று முற்பகல் 10.15 மணி தொடக்கம் 11.15 மணி வரை நடைபெறவுள்ளது. இதன்போது, பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான டொனி அயோட் ஆகியோர் உரை நிகழ்த்துவர்.

உச்சிமாநாட்டு முதல்நாள் அமர்வின் போது பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பு அவுஸ்திரேலிய பிரதமரினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. இதன்படி இரு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பார்.

இனப்படுகொலைக்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அங்கீகாரமாக இந்த மாநாடு கருதப்படும். மனிதப்ப்படுகொலைகளை ஏகாதிபத்தியங்களின் மூலதனச் சுரண்டல் ஏற்றுக்கொள்கிறது என்பதற்கு இந்த மாநாடு ஒரு குறியீடு.

மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்கி ஏமாற்றும் தமிழ் ஊடகங்களோ பிரித்தானியா இலங்கையைக் கண்டிக்கிறது என்றும், இந்தியா இலங்கையை மிரட்டுகிறது என்றும், சனல் 4 இலங்கையைத் தண்டிப்பதற்காக அனுப்பட்டது என்றும் தமது இறுதி நேர புரட்டுக்களுடன் சேடமிழுக்கின்றன. இனக்கொலையாளி மகிந்த இன்னும் இரண்டுவருடங்களுக்கு புனிதப்படுத்தப்பட்ட காலனிய அதிகாரத்தின் பிரதான முகவர். அதற்காக இலங்கை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version