இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வில்லியம் ஹேக் இலங்கைக்குச் சென்று ராஜபக்சவை மிரட்டப்போவதாகக் கூறித் தப்பிக்கொண்டார். ராஜபக்சவை மிரட்டும் ஏகாதிபத்திய நாடுகள் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொள்கின்றனவா அல்லது வியாபாரப் பேரம் நடத்துகின்றனவா என்பதே இங்கு பிரதான கேள்வி. இவ்வேளையில் கோப்ரட் வாச் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி கவனத்திற்குரியது.
செய்தியின் தமிழ் வடிவம்:
கூட்டுநிறுவன கண்காணிப்பகம் [Corporate Watch] அமைப்பானது எதிர்வரும்
நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடக்க இருக்கும் பொதுநாலவாய நாடுகளின் வணிக
சம்மேளனத்தினால் [Commonwealth Business Council] மேற்கொள்ளப்பட உள்ள
இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான வியாபார ஒப்பந்தங்களை ஆராய
உத்தேசித்துள்ளது.
இந்த வணிக சம்மேளனதின் நிகழ்ச்சி நிரலே இம்முறை சர்ச்சைக்குரிய பொதுநாலவாய
நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதான பங்குவகிக்கவுள்ளது. சர்சைக்குரிய
இந்தப் பொதுநாலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு பல மனித உரிமை
ஆர்வலர்களாலும் அமைப்புக்களாலும் புறக்கணிப்பு செய்ய கோரப்படுகின்றது.
பொதுநாலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினால் இலங்கையின் இனப்படுகொலை
அரசியலுக்கு உலக அங்கீகாரம் வழங்கப்படுமாயின் இந்த வணிக சம்மேளனத்தின் ஊடாக
வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் தமிழ் மக்கள் அல்லலுறுவதில் இலாபமடைய
உதவுவதுடன் இராணுவத்தால் தமிழ் மக்களிடம் இருந்து இன்னும்
அபகரிக்கப்பட்டிருக்கும் நிலங்களை அவர்களின் வியாபாரத்திற்கான உடமைகளாக
மாற்றுவதற்கும் உதவும்.
இந்த மூன்று நாள் வர்த்தக மாநாடே இதுவரை இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய
வணிக நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன் நிகழ்வானது
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டு வர்த்தக நிறுவனங்களையும் உலக அரசியற்
தலைவர்களையும் இலங்கையில் ஒரு கூரையின்கீழ் திரட்டவுள்ளது. இம்மாநாட்டு
மேசையில் புரளவுள்ள பெருந்தொகைப் பணமானது உலக அரசியல்வாதிகளை இலங்கை அரசின்
தீவிர மனித உரிமை மீறல்களை கண்டும் காணாததுபோல் இம்மாநாட்டில் பங்குபற்ற
வைக்கும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இன் நிகழ்வானது
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தினைத் தனியார்
மயமாக்குவதற்காக 1997 ஆம் ஆண்டு டோனி பிளேயரினால் லண்டனில் உருவாக்கப்பட்ட
பொதுநாலவாய நாடுகளின் வணிக சம்மேளனத்தினால் [Commonwealth Business
Council] ஒருங்கமைக்கப்பட்டிருக்கிறது . இந்த அமைப்பானது பிரித்தானிய
அதிகாரவர்க்கத்தினுள் இன்னும் பெரும் செல்வாக்குடன், மூத்த கொள்கை
வகுப்பாளரும் பிரித்தானிய அரச சான்சிலரின் மாமானாரும் ஆன ஹோவெல் பிரபு
போன்றவரால் வெற்றிகரமாக வழி நடத்தப்படுகிறது.
கூட்டுநிறுவன கண்காணிப்பகம் [Corporate Watch] அமைப்பு இன் நிகழ்வில்
பிரித்தானிய பிரதமர், டேவிட் கமரூனின் குழுவினரால் கைசாத்திடப்படவுள்ள
வர்த்தக ஒப்பந்தங்களை கண்டறிந்து அம்பலப்படுத்த உத்தேசித்துள்ளது. டேவிட்
கமரூன் அரசு இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக அகதித் தஞ்சம் கோருவோரை
இலங்கைக்கு திருப்பி அனுப்பிய நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரித்தானிய
நீதிமன்றங்கள் திருப்பி அனுப்பப்படுவோர் இலங்கை அரசால் சித்திரவதை
செய்யப்படலாம் என்ற காரணத்தால் நாடுகடத்துவது ஆபத்தானது என்று
தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையிலும் பிரித்தானிய
பெருவர்த்தக நிறுவனங்களும் அவற்றுடன் சார்புடைய பிரித்தானிய அமைச்சர்களும்
“சர்வாதிகார ஆட்சி முறை அதிகரித்துவரும்” இலங்கையில் வர்த்தக முதலீடுகளை
மேற்கொள்ள தயாராகிவிட்டனர்.
இவ் விடயத்தை நன்கு கண்டறிந்து பிரித்தானிய தேசிய ஊடகங்களில்
வெளியிடுவதுடன் புலம்பெயர்ந்த மற்றும் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள
தமிழ் ஊடகங்களிற்கும் தமிழ் மொழிபெயர்ப்பையும் வழங்க குறிபார்க்கின்றோம்.
இவ்விசாரணையின் விளைவாக இலங்கையில் நடைபெறும் பொதுநாலவாய நாடுகளின்
தலைவர்கள் மாநாட்டினால் ஏற்படும் சீரழிவான விளைவுகளை யாவருக்கும் விளக்கும்
முக்கிய தகவல் தரும் ஆவணங்கள் உருவாகும்.
http://corporatewatchshop.org.uk/chogm
தாம் சார்ந்த நாடுகளின் பல்தேசிய கோப்ரேட் வியாபார நிறுவனங்களின் அடியாட்களாகச் செயற்படும் அரசுகள் பல நாடுகளின் வழங்களைச் சுரண்டுவதற்காக இனக்கொலைகளை நடத்தியிருக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதற்கு ஆதாரமாகவிருந்த இந்த அரசுகளுக்கு ராஜபக்ச ஒரு வரப்பிரசாதம். ராஜபக்சவை மிரட்டி தமது நிறுவனங்களுக்கான முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே இவர்கள் முனைவார்கள். மனிதர்களின் உரிமைக்காக அல்ல. 2 பில்லியன் முதலீட்டைப் பகிர்ந்துகொள்ள இவர்களோடு தமிழ் மில்லியேனேர் ஒருவரின் தொலைபேசி நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கனவான் அமைப்புக்கள் பல்தேசிய கோப்ரட் கொள்ளை குறித்துப் பேசுவதில்லை. அவர்களில் பலர் இந்த அரசுகளுக்குச் சேவை செய்யும் அடிமைகள்.