இந்த நிறுவனம் இலங்கையில் நானோ தொழில் நுட்பத்தை மருத்துவத்தில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. கொமன்வெல்த் மாநாட்டின் போதே இந்த பல மில்லியன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் முதலாவது நானோ தொழில் நுட்பம் இலங்கை நோயாளிகளிடம் பரிசீலக்கப்படுகின்றது. மனிதர்களை சில இரவுகளுக்குள் கொத்துக்கொத்தாகக் கொலைசெய்வது எப்படி என்று வன்னி மண்ணில் பரிசோதித்தது போன்ற இன்னொரு ஆரம்பமா என்ற கேள்விகள் எழுகின்றன.
பிரித்தானியா போன்ற ஏகபோக அரசுகளின் பிடியிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதாக சிங்கள மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவே இலங்கையின் இலவச மருத்துவத்தையும் இலவசக் கல்வியையும் அழித்து ஏகபோக அரசுகளுக்கு விற்பனை செய்யும் மிருகத்தனமான வியாபாரி.
தெற்காசியாவில் சிறந்த இலவச மருத்துவச் சேவை இலங்கையிலேயே காணப்படுகிறது. மருத்துவத்திற்கு என ஐ.எம்.எப் அண்மையில் இலங்கை அரசிற்குக் கடன் வழங்கியிருந்தமை அறிந்ததே. மக்களின் உழைப்பில் வரிகட்டப்படும் ஐ.எம்.எப் இன் கடன் தொகை பிரித்தானிய பல்தேசிய நிறுவனத்திற்கு இலாபமாக வழங்கப்படும்.
இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழ் பிழைப்புவாதத் தலைமைகள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரனை அடுத்த ‘தேசியத் தலைவர்’ ஆக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் அணிதிரட்டப்படுவதும் அதற்கான தந்திரோபாயங்கள் வகுக்கப்படுவதுமே இன்றைய பிரதான அரசியல் கடமை. போராட்டத்தினூடாக மட்டுமே இலங்கையில் ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்த முடியும்.
இலவசக் கல்வியைத் தகர்க்கும் வெடிகுண்டுடன் இலங்கையில் இறங்கிய இளவரசர் சார்ள்ஸ்
உலகவங்கி இலங்கைக்கு மீண்டும் கடனுதவி : இலவச மருத்துவம் முற்றாக அழிக்கப்படும்
இலங்கையின் இலவச மருத்துவ சேவையையும் கட்டண சேவையாக மாற்றும் மகிந்த அரசு