Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்.

பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
_________________________________________________________
காலம்: மே 16, 2009, மாலை 6.00 மணி
இடம்: Recreation Centre
2190 Ellesmere Road (Ellesmere/Markam)
Scarborough, Canada
தொடர்புகளுக்கு:
(647) 287 1435
(416) 731 1752

சு.குணேஸ்வரனின் ‘பொ. கருணாகரமூர்த்தி படைப்புக்கள் – ஒரு பார்வை’ கட்டுரையிலிருந்து…
_____________________________________________________________________________________

புகலிடத்தில் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தவர்களில் பொ. கருணாகரமூர்த்தி முக்கியமானவர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார். இக்கட்டுரை கருணாகரமூர்த்தியின் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற மூன்றுகுறுநாவல்களைக் கொண்ட தொகுப்பினையும்@ கிழக்கு நோக்கி சில மேகங்கள்> அவர்களுக்கென்று ஒரு குடில் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இவை தவிர ‘பெர்லின் இரவுகள்’ என்ற கட்டுரை நூலும்> கூடு கலைதல் என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. எண்பதுகளில் தோற்றம் கொண்ட புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்புக்களில் தாயக நினைவும் அதனோடு இணைந்த வாழ்வுச் சூழலுமே அதிகம் பதிவாகியிருந்தன. பின்னர் அவை படிப்படியாக வரித்துக் கொண்ட புதிய அநுபவங்களையும் புலம்பெயர் இலக்கியம் பேச முற்பட்டபோதே தமிழ்ப் படைப்புலகில் மிகுந்த கவனத்திற் கொள்ளப்பட்டன. ஒரு அகதி உருவாகும் நேரம் (1994) என்ற குறுநாவல் ஊடாக தமிழகத்திலும் இலங்கையிலும் நன்கு அறியப்பட்ட பொ. கருணாகரமூர்த்தி தன் படைப்புக்களுக்கு வரித்துக் கொண்ட கதைக் கருக்கள் முக்கியமானவை. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள்,. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப் பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், . பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் முரண்பாடுகள், போரினால் வாழ்வின் விளிம்பில் து}க்கி வீசப்பட்ட மானிட உணர்வுகள், கர்மா பற்றிய விசாரணையும் வாழ்வும். வாழ்வு வசப்படும் என்ற குறுநாவல் ஜேர்மனிக்கு அகதியாய்ப் புலம்பெயர்ந்து ஒரே அறையில் வசித்து வரும் இளைஞர்களின் வெவ்வேறுபட்ட மனவுணர்வுகளையும் செயற்பாடுகளையும் சித்தாpக்கின்றது. ஒரு வகையில் ஜெயமோகன் கூறுவதுபோல் ‘ஏறத்தாள எல்லாக் கதாபாத்திரத்திலும் ஆசிரியர் சீராக ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். கீழைத்தேய கலாசாரத்தில் வளர்ந்த மனிதர்கள் மேலைத்தேய கலாசாரத்தை எதிர்கொள்ளும் தத்தளிப்புதான் அது. ..[சு.குணேஸ்வரனின் ‘பொ. கருணாகரமூர்த்தி படைப்புக்கள் – ஒரு பார்வை’ கட்டுரையிலிருந்து..] –

Exit mobile version