Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க் குற்றங்களுக்காக விசாரணை : HRW

வன்னிப் பகுதியில் சிறிலங்கா இராணுவம் மருத்துவமனகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் (HRW) கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்த எறிகணை மற்றும் வான் தாக்குலுக்கு உத்தரவிட இராணுவத் தளபதிகள் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008 டிசம்பர் மாதத்தின் பின்னர் போர்ப் பகுதிகளில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக மருத்துவமனைகளின் மீது குறைந்தபட்சம் 30 தடவைகளாவது தாக்குதல் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தமக்குத் தகவல் கி்டைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

இவை அனைத்திலும் கொடூரமான சம்பவமாக மே 2 ஆம் நாள் நடபெற்ற தாக்குதலைக் குறிப்பிடும் மனித உரிமைகள் கண்காணிப்பம், அன்றைய நாள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் 68 பேர் கொல்லப்ப்டும், 87 பேர் படுகாயமடந்திருப்பதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

“மருத்துவமனைகள் என்பது எறிகணைத் தாக்குல்களில் இருந்து பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கான இடம்” எனத் தெரிவித்திருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பக ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிராட் அடம்ஸ், அது தாக்குதலுக்கான ஒரு இலக்கல்ல எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மருத்துவர்களும், தாதியர்களும் பெருமளவு நோயாளிகள் குவிந்துள்ள நிலயில் குறந்தபட்ச உபகரணங்களுடன் தமது பணியைச் செய்துகொண்டிருக்கும் போது சிறிலங்கா இராணுவம் இந்த மருத்துவமனைமகள் மீது தாக்குதலை நடத்தியிருக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version