இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு தாம் அமெரிக்க அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத்
இந்த விடயத்தை குறிப்பிட்டு அவர், வாசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதில்,கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியங்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அமெரிக்க அதிகாரிகள், தமது மருமகனின் தொலைபேசியின் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சரத் பொன்சேகா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்க அதிகாரிகளின் இந்த முனைப்பு குறித்து இலங்கை அரசாங்கத்தின் உயர்தரப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.