Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ர அரசு சாட்சிசொல்லுமாறு அழைப்பு

அரசினால் அமைக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த அழைப்பை அரசும் ஆணைக்குழுவும் விடுத்துவருகிறது.
ஏற்கனவே கொழும்பில் நடைபெற்ற ஆணைக்குழு அமர்வுகளிற்கு சாட்சியமளிக்கச் சென்ற பலர் தாம் வேண்டுமென்று புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமையும், வட கிழக்கில் சாட்சியமளிக்க வந்த பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களைப் பதிவு செய்வதில் போதிய அக்கறை செலுத்தாது விட்டிருந்தமையும் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை, ஹியுமன் றைற்ஸ் வோச், சர்வதேச நெருக்கடிகள் குழு போன்ற சர்வதேச அமைப்புகளை இலங்கைக்கு வந்து ஆணைக்குழு முன்னிலையில் அவற்றின் கருத்துக்களைப் பகரிந்து கொள்ளுமாறு தாம் கேட்டதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார். இந்த அமைப்புகள் யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான சாடசியங்கள் குறித்து விசாரணைகளை நடாத்துமாறு வலியுறத்தி வருகின்றவை. இலங்கை அரசு அமைத்த ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல எனவும் குற்றம் சாட்டி வருபவை.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு விடுத்த கோரிக்கையை இவ்வமைப்புக்ள கூட்டாக நிராகரித்து விட்டன. இலங்கை நியமித்துள்ள விசாரணைக்குழு சுயாதீன பாராபட்சமற்ற விசாரணைகளை நடத்துவதற்கான சர்வதேச தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அதன் முன் ஆஜராக விரும்பவில்லை என இவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் ஆணைக்குழு பொறுப்புச் சொல்லும் தன்மையை நிறைவேற்றுவற்கும், தொடர்ச்சியாக தெரிவிக்கப்டும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கவும் அரசாங்கம் தவறிவிட்டதாகவும் இவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதே வேளை மன்னிப்புச் சபையின் பணிப்பாளர் மல்ஹோத்ரா, இலங்கை விசாரணைக்குழுவின் அமைப்பு, அதன் விசாரணை நடைமுறைகள், அது செயல்படும் மனித உரிமைகள் சூழ்நிலை ஆகிய அனைத்தும் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பினதும் திருப்திகரமானதுமான முடிவைக் கொண்டு வரும் என்பது சாத்தியமற்றதே எனவும், சாடசிகளின் பாதுகாப்புக் குறித்து மன்னிப்புச் சபை கவலை கொண்டுள்ளது என்றும் இலங்கை யுத்தக் குற்றச் செயல்களை பகிரங்கமாக மறுத்த முன்னாள் அதிகாரிகள் தற்போதைய விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியிமிருந்தார்.
இக்குழுக்களின் கருத்துத் தொடர்பாக தமது வெளிப்படையான வெறுப்பினை ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. இந்த மறுப்பின் பின்னணியில் ஒரு மறைகரம் இருக்கின்றமையை நாங்கள் உணர்கிறோம். அது தொட்ர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தள்ளார்.
இதே வேளை ரணில் விக்கிரமசிங்கவை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு அழைப்புவிடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.

Exit mobile version