Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேஸ்புக் பெண்கள் கைது : கண்துடைப்பிற்காக போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடந்த 17ம் தேதி இறந்தார். மறுநாள் அவருடைய இறுதிச் சடங்கு நடந்தது. இந்த இரு நாட்களும் மும்பையில் பந்த் கடைப்பிடிக்கப்பட்டது. இதை கண்டித்து ஷாகீன் தாதா என்ற 21 வயது இளம்பெண், ‘பால் தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள்: தினமும் இறக்கிறார்கள்’ என்று பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார். இதை அவருடைய தோழி ரேணு ஸ்ரீனிவாசனும் ஆதரித்து கருத்து வெளியிட்டார். இதையடுத்து, 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ஷாகீனின் மாமனாருக்கு சொந்தமான மருத்துவமனையை சிவசேனாவினர் அடித்து நொறுக்கினர்.
மும்பாய் மற்றும் இந்தியாவின் பல பகுதிகள் செயலற்று மக்கள் அலை மோதினர். ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் கொலை உட்பட பல கொலைச் சம்பவங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய பால் தாக்கரே இந்து அடிப்படைவாதி.
இந்துமதத்த வெறியையையும் பார்பன ஆதிக்கத்தையும் மக்கள் மத்தியில் ஊட்டி வளர்த்து சமூகத்தை நச்சாக்கிய மும்பை தாதாவான பால் தக்கரே இன் குண்டர்படையில் ஈழத் தமிழர்கள் ஐவர் இணைந்திருந்தனர்.
ஏற்கனவே இந்துதுவா அதிகார அமைப்பினால் கட்டமைக்கப்பட்ட இந்து வெறி வன்முறையாக வளர்ந்து சமூகத்தை அழிக்கிறது. இந்த அடிப்படையிலேயே பேஸ்புக்கில் எழுதிய இரு இளம் பெண்கள் குற்றம் எதுவும் சுமத்தப்படாமலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்த கொங்கன் பகுதி போலீஸ் ஐ.ஜி.பி.யை மகாராஷ்டிரா அரசு நியமித்தது. அவர் தனது அறிக்கையில், ‘பெண்களை கைது செய்தது தவறு. இந்த தவறை செய்த போலீசார் மீது நடவடிக்க எடுக்க வேண்டும்’ என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, தானே மாவட்ட (ரூரல்) போலீஸ் எஸ்.பி. ரவீந்திர செங்காவ்கர், பால்கர் போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் பிங்க்ளே ஆகியோரை மகாராஷ்டிரா அரசு நேற்று சஸ்பெண்ட் செய்தது.

Exit mobile version