பிரா போடாமல் விழாவிற்கு வந்து மாட்டிக்கொண்ட நடிகை,
மாணவியோடு சில்மிசம் செய்யும் ஆசிரியர்,
கலைஞரின் 91வது பிறந்தநாள்; குமரிகளின் குத்தாட்டம்
போன்ற செய்திகளைக் காணலாம். இவற்றைக் கடந்து இணையத்தளத்திற்குச் சென்றால் குறுக்கும் நெடுக்குமாகத் தொங்கி தொல்லை தரும் விளம்பரங்கள். சற்றுக் கீழே எங்காவது ஒரு மூலையில் தேசியத் தலவர் புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்திருக்கிறார் என்ற சிறிய குறிப்புக் காணப்படும்.செய்திகள் என்றால் நடுநிலையாக இருக்குமாம் என்று அவர்களே வரை முறை வைத்திருக்கிறார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அபிவிருத்திக்கு முக்கியத்துவமளிக்கிறார் என்று இன்னொரு செய்தி தொங்கும். அபிவிருத்தி என்று அவர்கள் கூறுவது திட்டமிட்ட அழிப்பு என்பதை விளங்கிக்கொள்ளாத இவர்கள், இனக்கொலையாளி ஜனாதிபதியை மாண்பு மிகுந்தவர் ஆக்கிவிடுகின்றனர். அதற்கும் தேசியம் என்றே பெயர்வைத்துத் தொலைத்திருக்கிறார்கள்.
இந்த ஊடகக் கோமாளிகள் நடத்தும் பிழைப்பு மக்களின் நாளாந்த வாழ்வில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.