Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேஸ்புக்கில் இணைந்ததால் கல்லால் அடித்துக் கொலைசெய்த இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழு

Syrian girl stoned to death for using Facebook accountசிரிய அரசுக்கு எதிராகக் கிளர்சியில் ஈடுபட்டுவரும் குழுக்களில் ஒன்றான ISIL militants  என்ற குழு பேஸ் புக்கில் கணக்கு ஒன்றை ஆரம்பித்ததற்காக பெண் ஒருவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளது. ராக்கா என்ற சிரிய நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பத்தூம் அல் ஜஸ்மீன் என்ற பெண் செய்த தவறு பேஸ் புக்கில் கணக்கு ஒன்றை ஆரம்பித்தது மட்டுமே. அமெரிக்க அரசாலும் ஐரோப்பிய – இஸ்ரேலிய அரசுகளாலும் ஊக்குவித்து வளர்கப்படும் பயங்கரவாதக் குழுக்கள் மனிதத்தன்மையற்ற மிருகங்களை உற்பத்தி செய்துள்ளன. போராட்டம் என்பது மனிதாபிமானத்தோடும் சமூக உணர்வோடு தொடர்புடைய உயரிய நடவடிக்கை. ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்படும் இக்குழுக்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் அழிக்கப்படும். இக் குழுவினர் தமது இஸ்லாமிய நீதிமன்றத்தில் இளம் பெண்ணை நிறுத்திய பின்னர் பொது வெளியில் கொட்டும் வெயிலில் கல்லால் அடித்துக் கொன்று போட்டனர்.

Exit mobile version