
இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் போது பல சேனா என்ற அரச ஆதரவுக் குண்டர்கள் ஊடாக இன்று இரவும் தொடர்கிறது. பேருவளையில் பல முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் வீடுகளும் அரச ஆதரவுப் பயங்கரவாதிகளால் சூறையாடப்படுகின்றன.
பேருவளையில் அமைந்திருக்கும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்-ஜாமியா நளீமியா- கோட்டாபய பௌத்த குண்டர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தைத் தாக்கி அழிப்பதே அவர்களின் நோக்கமாகும் என இஸ்லாமியத் தமிழர்கள் அங்கிருந்து தெரிவிக்கின்றனர். வெலிபன்னயிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வியங்கல்ல எனும் முஸ்லிம் கிராமத்தை நோக்கி இனவாதிகள் வரப்போவதாக தகவல் வெளியாகி, பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதனால் அங்கு பதட்ட நிலை தோன்றியுள்ளதாக அறியமுடிகிறது. சுமார் 5000 முஸ்லிம்கள் வாழும் குறித்த கிராமத்தில்மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்றனர்.
