Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேரினவாத அரசு உருவாக்கியுள்ள பாசிசத்தை ஜனநாயகம் என்று அழைக்கும் விக்னேஸ்வரன்

Vigneswaranஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இத் தேர்தல் அமைகின்றது. எனவே இந்தப் போராட்டத்தில் பங்காளிகள் ஒவ்வொருவரும் போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் என கூட்டமைப்பின் வட,மாகாணசபை முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரச ஆதரவு துணைக் குழுக்கள் ஒரு பக்கத்திலும் விக்னேஸ்வரனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபக்கத்திலும் வாக்குப் பொறுக்குவதற்காக மகிந்த ஜனநாயகத்தைப் பாதுகாகாக்க முற்படுகின்றனர். மகிந்த அரசு உருவாக்கியிருக்கும் பாசிசத்தை ஜனநாயகம் என்று மக்களுக்குக் கூறும் விக்னேஸ்வரனும் அதே பாசிசத்தை நிர்வகிப்பதற்காக தேர்தலில் வாக்குப் பொறுக்கும் இனக்கொலை ஆதரவுக் கட்சிகளும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தப்படுதல் அவசியமானது.

Exit mobile version