கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் இன்று அவரது கொழும்பு இல்லத்தில் காலமானார்.கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட அவர் பேராதனை பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் அவர் பேராசிரியராக பணியாற்றியதுடன் தமிழ் இலக்கிய பரப்பில் தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்தார்.
யாழ் மையவாத நிலப்பிரபுத்துவ சிந்தனை மேலோங்கியிருந்த காலப்பகுதியில் சிவத்தம்பியின் எதிர்ப்பிலக்கியங்கள் சமூகத்தின் சிந்தனை மாற்றத்தில் காத்திரமான பங்கு வகித்திருக்கின்றன. ஈழத்து முற்போக்கு இலக்கியம் குறித்த எந்த உரையாடலிலும் பேராசிரியர் சிவத்தம்பியை உள்ளடக்கியதாகவே அமையமுடியும்.