இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக மலேஷியப் பேராசிரியர் இராமசாமி மீது நடவடிக்கை எடுக்கும் படி மலேஷிய அரசை வலியுறுத்தியுள்ளது இந்திய அரசு. வன்னிப் போருக்குப் பின்னர் தமிழகத்தில் எழுந்த அதிர்வலைகள் இந்திய இறையாண்மைக்கு எதிரான நீண்ட கால அச்சுறுத்தலாகப் பார்க்கிறது இந்திய அரசு. தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள், இனக்கொலைக்கு எதிராகப் பேசுகிறவர்களுக்கு எதிராக தீவீரமான நடவடிக்கைகளுக்கான முன்னோட்டங்களை இந்தியா செய்து வருகிறது. இந்நிலையில் போருக்குப் பின்னர் தான் கலந்து கொண்ட எல்லாக் கூட்டங்களிலும் போருக்குப் துணை போன இந்தியாவுக்கு எதிரான காட்டமான விமர்சங்களை முன் வைத்தார் பேராசிரியர் இராமசாமி. சமீபத்தில் மதுரையில் நடந்த நாம் தமிழர் அமைப்பின் துவக்க விழாவிலும் கலந்து கொண்ட அவர் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சைக் குறிப்பெடுத்த உளவுபிரிவினர் மத்திய அரசுக்கு அனுப்பிய விரிவான அறிக்கையில் இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானவர் இராமசாமி என்ற குறிப்பையும் அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையை மலேஷிய அரசுக்கு அனுப்பிய இந்திய வெளிவிவாகரத்துரை அமைச்சகம் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய இராமசாமி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தியுள்ளது.