Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொன்சேகாவிற்குச் கடூழியச் சிறை : மகிந்த அனுமதி

ராஜபக்ச  குடும்பத்தினருடன்  இணைந்து  இனப்படுகொலையைத் திட்டமிட்ட  சரத் பொன்சேகாவிற்கு  சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இலங்கை இராணுவத்தில்  உள்ளக  முரண்பாடுகள்  ராஜபக்ச குடும்பத்தை  மிரட்டும்  இன்றைய சூழலில்  தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் பல எதிர்விளைவுகளை  ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரத் பொன்சேகாவுக்கு 30 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பின் படி இந்த தண்டனை இன்று முதல் அமுலாகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் கடந்த 17 ஆம் திகதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று நேற்று நாடு திரும்பிய நிலையில் இந்த தீர்ப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆயுத கொள்வனவின் போது அவருடைய மருமகன் தனுன திலனரட்னவுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.

Exit mobile version