வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு கூற வேண்டுமெனதெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் அரசின் கனரக ஆயுதங்களுக்குப் பொதுமக்களே இரையாவதாக மேலும் தெரிவித்துள்ளது.
யுத்த வலயத்தில் கனரக ஆயுத பாவனை குறித்த அரசாங்கத்தின் உறுதிமொழி பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வன்னி மோதல்கள் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட செய்மதிப் படங்கள் மூலம் அரசாங்கப் படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்தில் நடாத்தும் உக்கிர தாக்குதல்கள் அம்பலப்பலமாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு கூற வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரையில் சுமார் 30 வைத்தியசாலை அரசாங்கப் படையினரின் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது