அந்த பிரதேசத்து பௌத்த மத விகாரையைச் சேர்ந்த பாணம சந்த்ரா ரத்ன தேரர், பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக பின்னர் அறிவித்தார்
தமிழ்ப் பேசும் கிராமவாசிகள் அங்கு தொடர்ச்சியாகப் பொலீசாரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும். கிராமவாசிகளை அவர்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 17ம் திகதியன்று நள்ளிரவு ராகம்வெல கிராமத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த பல வீடுகளையும் சேனைப்பயிர்ச்செய்கைகளையும் தீயிட்டு எரித்துவிட்டு விவசாயிகளையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக கூறும் கிராமவாசிகள், பொலிசார் தமது காணிகளை அபகரிப்பதாக அம்பாறை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச்செய்தி குறித்த முழுமையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனினும் மக்களின் போராட்டம் வேறு திசைவழியில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதை காணத்தக்கதாக உள்ளது.