இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் ராஜகிரிய பகுதியில் 4வது ஒழுங்கையில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வந்த கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கடந்த 24ம் திகதி உடைத்து ராஜபக்ச அரசால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் எதிர்ப்பை மீறி நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் இந்த தேவாலயத்தை இடித்து தள்ளியுள்ளனர். நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தேவாலயத்தின் போதகர் திருச்செல்வத்தை காவல்துறையினர், கிறிஸ்தவர்கள் முன்னிலையில் காலால் உதைத்துள்ளனர்.