இன்று – 15.01.15 – மாலை நடைபெற்ற இச்சம்பவம் வேர்-வெரிஸ் என்ற பெல்ஜியம் நாட்டின் நகர் ஒன்றில் நடைபெற்றது.
பிரான்சில் நடைபெற்ற சார்லி எப்டோ கொலைகளில் தொடர்புடையவர்கள் எனப் பிரஞ்சுப் புலனாய்வுத்துறை கருதிய இருவர் அந்த நாட்டின் போலிசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
கொலையின் பின்னர் வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிறவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நிறுவன மயப்பட்ட நிறவாதம் பிரான்ஸ் முழுவதும் பரப்பப்படுகின்றது. அரசிற்கும் அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான மக்களின் உணர்வு அப்பாவி வெளி நாட்டவர்களுக்கு எதிராகத் திருப்பி விடப்படுகின்றது.
இந்த நிலையில் பெல்ஜித்தில் கொலை செய்யப்பட்ட இருவரும் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்தனர் என பெல்ஜியம் போலிஸ் கூறுகின்றது.
பயங்கரவாத்த்திற்கு எதிரான போராட்டம் என்ற தலையங்கத்தில் அப்பாவி மக்கள் மீது அரசுகள் நட்த்தும் பயங்கரவாத யுத்ததம் கடந்த பத்தாண்டுகளில் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டுள்ளது.