Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெலியத்தையில் மகிந்த ஆரம்பித்த கொலைகள் வன்னி ஊடாக சிங்கப்பூரில்..

பெலியத்த பகுதி நிலப்பிரபுத்துவக் குடும்பத்தின் அடியாளான மகிந்த ராஜபக்ச அப்பகுதியில் 80 இற்கும் அதிகமானவர்களைக் கொலைசெய்த அடியாளாகப் பிரபலமானார். இக்கொலைகளை மகிந்த தானே முன் நின்று நிகழ்த்தியதாக பெலியத்த மக்கள் கருதுகின்றனர். அரசியலுக்காகக் கொழும்பு செல்வதற்கு முன்னதாக வயல் வெளியில் வழக்குரைஞர் ஒருவரை வெட்டிக்கொன்றதாக ஒரு சாட்சி கூறப்படுகின்றது.புலிகள் பலமான அமைப்பாக இருந்த காலத்தில் அரசியல் லும்பன் ஒருவரை பிரதமராக்க வேண்டிய தேவை கருதி மகிந்தவை பிரதமராக்கினார் மற்றொரு பேரினவாதியான சந்திரிக்கா குமாரணதுங்க. பெலியத்த கொலைகளில் ஆரம்பித்து வன்னியில் ஒரு லட்சம் மனிதர்களைக் கொன்று குவிப்பதற்கு அடியாள் தேவைப்பட்ட போது உலக ஏகாதிபத்தியங்கள் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கின.
இன்று மகிந்தவை சுற்றி உலகம் முழுவதும் ஒரு கூட்டம் உருவாகியுள்ளது. இவற்றின் வடிவங்கள் மாறுப்டினும் நோக்கம் ஒன்றே.
இந்த வகையில் பேராசிரியர் றொகான் குணரட்ண என்ற அரக்கத்தனமான வியாபாரி மகிந்த அரசிற்கு மனித முகத்தை வழங்குபவர்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 1200 பொதுமக்கள் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உண்மையே என்று சிங்கப்பூரைத் தளமாக கொண்ட தீவிரவாத ஆய்வு மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்த அனைத்துலக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய புலமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ‘வெளிநாட்டு மண்ணில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தல்‘ என்ற பொருளில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Exit mobile version