Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரும்பலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிகிறது – தா.பாண்டியன்.

இந்தியா இலங்கைக்கு ஏராளமான நிதிச் சலுகைகளை அளித்துள்ளது. ஆனால் இச்சலுகைகளுக்கு எதிரான கடும் விமர்சங்களும் எழுந்துள்ள நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர்- தா.பாண்டியன். ” விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்து ஓர் ஆண்டுக்கு மேலான நிலையில், போருக்கு சம்பந்தமில்லாத தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்கின்றனர். போர் முடிந்த கடந்த 2009 மே மாதம் முகாம்களில் 4.50 லட்சம் தமிழர்கள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அம் முகாம்களில் 40 ஆயிரம் மக்களே இருப்பதாக வெளிவிவகாரத் துறையும், முதல்வர் கருணாநிதியின் கடிதத்தில் 80 ஆயிரம் மக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியெனில் மீதமுள்ள 4.10 லட்சம் மக்களின் நிலை குறித்தும், அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபட்ச தெளிவுபடுத்த வேண்டும். இதுதொடர்பாக, சுதந்திரமாக செய்தி சேகரித்து வெளியிட தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள் அனுமதிக்கப்பட வேண்டும். பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டு அரசு அமைத்துள்ள குழு விசாரணையில், பெரும்பலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், மத்திய அரசு ரூ.1,900 கோடி நிதியுதவி செய்திருப்பதற்கான காரணம் புரியவில்லை.குண்டுகள் போட்டு தமிழக மக்களின் குடியிருப்புகளை அழித்த இலங்கை அரசே அவ்வீடுகளை கட்டித்தர வேண்டும். அதைவிடுத்து இந்திய அரசு நிதி ஒதுக்கி வீடுகள் கட்டுவது இப்படுகொலையில் இந்திய அரசுக்கும் தொடர்புள்ளதா என சந்தேகிக்க வைக்கிறது. இந்நடவடிக்கைகளை பார்க்கையில் போபால் விஷவாயு தொடர்பான தீர்ப்பும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இல்லை.

Exit mobile version