Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் : சட்டத்தரணி. இ.தம்பையா

.தம்பையாபெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள ஏற்பாடுகள் இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் மக்கள் தொழிலாளர் சங்கம் 19ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வழங்கப்பட என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா அவர்கள் அரச துறைக்கு பத்தாயிரம் சம்பள உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு ஐயாயிரம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுள்ளது. எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் 2500 சம்பள உயர்வு பற்றி பேசப்படுகிறது. இது நியாயமற்றது. சம்பளம் எவ்வளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேர்மையாக திறந்த கலந்துரையாடலை செய்ய வேணடும். அதன் பின்னர் எவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்ற நிலையில் வலமைப் போல் இம்முறையும் சம்பளம் அதிகரிக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்ற கருத்து அவர்களினால் இன்று ஊடகங்களில் பரப்;பப்டுகிறது. எனவே அதனை எதிர் கொள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தயாராக வேண்டும் என்றார்.

இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உடன்பாட்டு முடிவடைகின்ற நிலையில் 2003ஆம் ஆண்டு 13ம் இலக்க கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் தொழிலாளர் சங்கம் மகஜர் ஒன்றை தொழில் ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பித்த பின்னரே குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ. தம்பையா கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அதில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள், அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கைச்சாத்திடுவதனால் ஏனைய தொழிற் சங்கங்களுடனும் கலந்துரையாடி சம்பள விடயம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுடன் சம்பளப் பேச்சுவார்த்தைக்கு செல்வது பேரப் பேச்சை தொழிலாளர்களுக்கு சார்பாக மாற்றக்கூடியது என்றார். மேலும் பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ந்தும் இலாபத்தில் இயங்கி வருகின்றமையை அவர்களின் நிதி கூற்றுகளில் இருந்து காண முடிவதாக சுட்டிக்காட்டினார். அமெரிக்க டொலரின் பெறுமதியை அடிப்படையாக கொண்டு கென்னியா இந்தியா போன்ற நாடுகளின் தொழிலாளர்களுக்கு இலங்கையை விட குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக சொலப்படும் கருத்துக்கு பதிலளிக்கையில் கென்னியாவில் அமெரிக்க டொலர் ஒன்று கென்னிய சிலிங் 91, இந்தியாவில் அமெரிக்க டொலர் ஒன்று இந்திய ரூபா 62, இலங்கையில் டொலர் ஒன்று இலங்கை ரூபா 133 என இருக்கும் நிலையில் அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டு இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் அதிகமாக பெறுகின்றார்கள் என்று கூறுவது அடிப்படையற்ற வாதமாகும் என்றார்.

தொழில் ஆணையாளர் நாயகத்துடன் நடந்த சந்திப்பின் போது 2015 மார்ச் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள திருத்த ஏற்பாட்டில் வாழ்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ற கொடுப்பனவு உறுதி செய்யப்பட வேண்மென மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா கேட்டுக் கொண்டார். ஏனைய தொழில் துறைகளில் செய்யப்படும் கூட்டு ஒப்பந்தங்களில் அடிப்படை கொடுப்பனவுகளுடன் வாழ்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ற மேலதிக கொடுப்பனவு இருக்கின்ற நிலையில் அது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்த சம்பள ஏற்பாட்டில் இல்லாதிருக்கின்றமையை இ.தம்பையா அவர்கள் சுட்டிக் காட்டினார். கூட்டு ஒப்பந்தம் நியதிச்சட்ட (பொதுவான தொழில் சட்ட) ஏற்பாடுகளை மீறியுள்ளமை, ஒப்பந்த நியதிகள் தோட்ட நிர்வாகங்களினால் மீறப்பட்டுள்ளமை, தொழிற் சங்க உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கினார்.

இதன் போது கருத்து தெரிவித்த தொழில் ஆணையாளர் நாயகம் திரு. ஏரத் யாப்பா குறித்த விடயம் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் தரப்பினராக உள்ள தொழிற் சங்கங்களுக்கும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதியான இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கம்பனிகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.

மக்கள் தொழிலாளர் சங்கம் தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்திருந்த மகஜரானது பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
நியதிச்சட்டங்களை மீறி கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகள்

2013 ஆம் ஆண்டு 10 இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடிப்படைச் சட்டத்திற்கு மட்டுமே ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுகின்றது. ஊ.சே.நிதி, ஊ.ந.நிதி சட்டங்களில் குறிப்பிட்டள்ளது போன்று முழு கொடுப்பனவுகளுக்கு (வழவயட நயசniபெ) அவை வழங்கப்படாதிருக்கின்றது.

2003 ஆம் ஆண்டு 13 இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் வேலை செய்து பெறும் சம்பளத்தில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை ஆகியன வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இல்லை.

ஒரு வாரத்திற்கு 1 ½ நாள் நியதிச்சட்ட விடுமுறை இருக்கின்ற போதும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே (ஞாயிறு மட்டுமே) விடுமுறையாக வழங்கப்படுகின்றது.
நிதிச்சட்ட விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் வேலை செய்யும் போது 1- 1ஃ2 நாள் சம்பளம் வழங்கப்படுவதாக 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 9 (ஐஐ) ல் குறிப்பிட்டுள்ள போதும் வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவு சேர்க்கப்படாது அந்த 1 ½ நாள் சம்பளம் கணக்கிடப்படுகிறது.

கூட்டு ஒப்பந்த நிதியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீறல்கள்.

கூட்டு ஒப்பந்தத்தம் மற்றும் நியதிச் சட்டங்களை மீறி தோட்ட முகாமைகளினால் கொடுக்கப்பட்ட வேலை அளவை (ழெசஅ) பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக தொழிலாளர்களுக்கு ½ நாள் சம்பளம் பிடிக்கப்படுகின்றது.

ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் தொழிலாளர்களிடம் இருந்து பணியை பெற்றுக் கொள்ளும் அடிப்படை சம்பளம் மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு என்பவற்றை அடிப்படையாக கொண்டு 1 ½ நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த கொடுப்பனவுக்கு வேலை அளவில் (ழெசஅ) அதிகரிப்பு ஏற்படக்கூடாது எனவும் 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 9 (ஐஐ) ஏற்பாடு செய்கின்ற போதும் அந்நாட்களில் கைகாசுக்கு பணியைப் பெற்றக் கொள்ளப்படுகிறது. அல்லது சாதாரண நாள் ஒன்றின் வேலை அளவை (ழெசஅ) அதிக வேலை அளவு நிர்ணயிக்கப்பட்டு அதனை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டும் 1 ½ நாள் சம்பளம் வழங்கப்படுகிறது.

வேலை அளவு (ஒரு நாளுக்கு பறிக்க வேண்டிய தேயிலை கிலோ மற்றும் இறப்பர் கிலோ) என்பவைகள் தோட்ட முகாமைத்துவமும் தோட்டத் தலைவர்களைக் கொண்ட குழுவும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும் என்ற 2003ஆம் ஆண்டு 13ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் 9(i) ஏற்பாட்டை மீறி தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக வேலை அளவை அதிகரிக்கின்றனர்.

2013ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்படி வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவை பெற மாதமொன்றில் வழங்கப்பட்ட மொத்த வேலை நாட்களில், ஞாயிறு, மற்றும் பௌர்ணமி மற்றும் ஏனைய நியதிச்சட்ட விடுமுறைகளை சேர்க்காது 75 வீத வரவை பூர்த்தி செய்திருக்க வேண்டும். எனினும் சில தோட்டங்களில் 75 வீதத்திற்கு தேவைப்படும் நாட்களை விட ஒன்று தொடக்கம் நாலு நாட்கள் அதிகமாக தேவை என்ற ஒப்பந்தத்தை மீறும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. இது 2013ஆம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் பிரிவு யு (i) மற்றும் டீ (i) ஆகியவற்றை மீறுவதாகும்.

தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக இரு நாட்கள் அல்லது அதற்கு மேல் வேலைக்கு சமூகமளிக்காவிடினும் அவரிடம் வைத்திய சான்றிதழை தோட்ட நிர்வாகங்கள் கோருகின்றன. வைத்திய சான்றிதழ் வழங்கப்படும் வரை வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசான்றிதழை வழங்கியப் பின்னர் புதிய தொழிலாளர்களாக பதியப்படுகின்றனர். சுகயீனம் தவிர வேறு காரணங்களுக்காக இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்கும் தொழிலாளர்களுக்கும் இவ்வாறான நடைமுறையை தோட்ட நிர்வாகங்கள் பின்பற்றி வருகின்றன. இதனூடாக அமைவுவழி வேலை நீக்கத்தை தோட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன.

புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் தொழிலாளர்கள் சமயாசமய தொழிலாளர்களாக பல மாதங்களாக வேலை வாங்கப்படுகின்றனர். சில தோட்டங்களில் வருடக் கணக்கில் சமயாசமய தொழிலாளர்களாக வேலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் தொழிலாளர்களிடம் இருந்து தோட்ட நிர்வாகம் வெற்று பத்திரத்தில் கையொப்பந்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. எவ்வித தொழில் ஒப்பந்த ஆவணமும் வழங்கப்படுவதில்லை. இத்தொழிலாளர்களிடம் இருந்து தொழிற்சட்டங்களை மீற வேலை வாங்கப்படுகிறது.

சில தோட்டங்களில் தோட்ட தொழிலுக்கு மேலதிகமாக குத்தகை முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளாந்த தொழிலை வழங்க தோட்ட முகாமைகள் மறுத்து வருகின்றன.

மகபேற்று விடுமுறை கற்பிணி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களை வேலையில் இருந்து ஒதுக்கிவைக்கும் நடவடிக்கைகள் நிலவுவதுடன் கற்பிணி தொழிலாளர்கள் கற்ப காலத்தில் இல்லது குழந்தை பிறந்த பின்னரோ மேலதிகமாக சில நாட்கள் விடுமுறை எடுத்திருந்தால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர் அல்லது புதிய பதிவிலக்கத்தில் புதிய தொழிலாளராக பதிவு செய்ய ஒத்துக் கொண்டால் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படலாம் என நிபந்தனை விதித்து புதிய பதிவு இலக்கத்துடன் புதிய தொழிலாளியாக பதிவு செய்யப்படுகின்றனர்.

கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின் 10டீ பிரிவானது கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டப் பின்னர் அக்கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளை மும்மொழியிலும் தொழில் இடங்களில் ஒட்டப்பட வேண்டும் என ஏற்பாடு செய்துள்ள போதும் இதனை தோட்ட நிர்வாகங்கள் இதுவரையில் மேற்கொண்டதில்லை.
தொழிற்சங்க உரிமைகள் மீறல்கள்

2003ஆம் ஆண்டு 13ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் 19ஆம் உறுப்புரையில் தொழிலாளர்களின் மனக்குறைகள் மற்றும் தொழில் பிணக்குகள் தோட்டக் குழுக்கள் ஊடாக தீர்ப்பதற்கு தொழிலாளர் குறிப்பு புத்தகம் பேணப்படுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ள போதும் இது பெரும்பாலான தோட்டங்களில் பின்பற்றப்படுவதில்லை.

2003ஆம் ஆண்டு 13ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் உறுப்புரை 19 (i) யின் கீழ் வாரத்தில் ஒரு நாள் முகாமையாளர் அல்லது உதவி முகாமையாளரினால் தோட்டத் தொழிலாளர் தினம் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள போதும் சில தோட்டங்களில் இவ்வாறு நடாத்தப்படுவதில்லை. தொழிலாளர் தினம் என்ற ஒன்று பல தோட்டங்களில் இருக்கின்ற போதும் அத்தினம் முகாமையாளர்கள் சமூகமளிப்பதில்லை. எனவே பெயர் அளவிலேயே தொழிலாளர் தினம் என்பது காணப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான விடங்களில் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் போது அதற்கான பதில்கள் தோட்ட முகாமைகளிடம் இருந்து வருவதில்லை. இது தொழிற்சங்க செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையாகும். அத்தோடு தொழிற்சங்கங்களையும் தொழிற்சட்டங்களையும் அலட்சியம் செய்யும் போக்காகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம், வீடமைப்பு, உட்கட்டுமானம் என்பவற்றுக்கு பொறுப்பாக உள்ள பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திடம் (Pர்னுவு) தொழிலாளர்கள் சுகாதாரம், வீடமைப்பு, உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் வினவும் போதும் அதற்கான பதில் அனுப்பப்படுவதில்லை.
பொதுவாக கூட்டு ஒப்பந்தங்களில் சம்பளம் அல்லது சம்பள உயர்வு வாழ்கை செலவிற்கான படியையும் உள்ளடக்கிய தொகுக்கப்படுவது பொதுவான தராதரமாக கொள்ளப்படுவதுண்டு. இந்த தராதரத்திற்கு மாறாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு அல்லது சம்பள உயர்வில் வாழ்கைச் செலவிற்கான படி உள்ளடக்கப்படவில்லை.

பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே வர்த்தமானப் பத்திரத்தில் வெளியிட்டுள்ளது. சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டாமை மொழி உரிமை மீறல் மீறலாகும்.
கோரிக்கைகள்

நியதிச்சட்டத்தை மீறி கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஏற்பாடுகளை நீக்கவும் நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கு உடன்பாடுடைய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் அமைவதனையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்டப்படி கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளையும் நியதிச் சட்டங்களையும் தோட்ட நிர்வாகங்கள் மீறப்படாமல் இருப்பதையும் அவை நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்ய தோட்ட முகாமைகளுக்கும் உப தொழிற் திணைக்களங்கள் ஊடாக யதார்த்தபூர்மான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக குறித்த உப தொழிற் திணைக்கள எல்லைக்குள் வருகின்ற தோட்ட முகாமையாளர்களை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள், நியதிச்சட்டங்கள் ஆகியவற்றை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய குறித்த உப தொழிற் திணைக்கள எல்லைக்குள் பணியாற்றுகின்ற தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைத்து இதற்குகமைவாக ஏற்ற பொறிமுறையொன்றை பணிப்புரை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொழிலாளர்களின் உரிமைகளை நிலை நிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் உத்தியோகபூர்வ முறையில் அனுப்பும் கடிதங்களுக்கு பொது நியமங்களுக்கு உட்பட்டு தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதை உறுதி செய்ய தோட்ட முகாமைகளுக்கும், பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மற்றும்; பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்திற்கும் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படும் போது வாழ்கைச் செலவு படி உள்ளடக்கும்படி வழியுறுத்தப்பட வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மொழி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யவும் எதிர்வரும் காலத்தில் பெருந்தோட்ட மக்களுடன் தொடர்பான கூட்டு ஒப்பந்தங்களை வர்த்தமானப் பத்திரத்தில் வெளியிடும் போது சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும் வெளியடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

Exit mobile version