தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசுகையில், கடந்த 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பெரம்பலூர், விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் தலித்துகள் ஆலயம் நுழைய அனுமதிக்கப்பட்டபோது விழுப்புரத்தில் மட்டும் தடுத்து தடியடி நடத்தியது ஏன்? தமிழ்நாடு முழுவதும் தீண்டாமைக்கொடுமை தலைவிரித்தாடுகிறபொழுது திமுக அரசு மவுனியாக வேடிக்கை பார்ப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும் போது, 30ம் தேதி காங்கியனூரில் போராட்டத் திற்கு அமைதியாக சென்ற வர்களை தடுத்து நிறுத்தி ஜி.லதா எம்எல்ஏ உட்பட அனைத்து தலைவர்களை யும் தோழர்களையும் தாக்க உத்தரவிட்ட எஸ்பியை கண்டித்ததோடு, தவறி ழைத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி கள் மீது வழக்கு தொடருவோம் என்றும் எச்சரித்தார்.
சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் பி.செல்வ சிங் பேசும்போது, “100 பேரை சிறையில் அடைத்து விட்டதால் எங்கள் போராட்டம் ஓய்ந்து விடாது. மாறாக, மாவட்டத்தின் 100 கிராமங்களில் தொடர்ச்சியாக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார். சிபி எம் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தனும் உரையாற்றினார். நிறைவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பா ளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.