Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியார் படம் தெலுங்கில் ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

சுயமரியாதைக் கருத்துக்களுக்காக நீண்டகாலமாக போராடி வந்தவர் பெரியார். தமிழக திராவிட இயக்கத்தை பரவலாக மக்களிடம் கொண்டு சென்ற பெரியாருக்குப் பின்னர் கொள்கையையும் கட்சியையும் தன் தம்பியான கி.வீரமணி என்பவரிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அதன் பின்னர் திராவிடர் கழகம் தென்னிந்தியாவின் அதிக சொத்துக்கள் மிகப்பெரிய கம்பெனியாக மாற்றப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவிடமும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியிடமும் அண்டிப்பிழைத்து சொத்தை வளர்த்துக் கொள்வதே வீரமணியின் வேலை. இந்நிலையில் திக கம்பெனியே இயக்கிய படம்தான் பெரியார் படம். கருணாநிதியை திருப்திப்படுத்தும் விதமாக பெரியார் படத்தை எடுத்து முழு வரிவிலக்கையும் பெற்றுக் கொண்ட வீரமணி அப்படத்தை இந்தி, மலையாளம், தெலுங்கில் வெளியிட தீர்மானித்து வெளியிட்டார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர் இன மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஆந்திராவில் இப்படத்தை ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியிட்டுள்ளா கி.,வீரமணி.ஈ.வே.ரா பெரியார் என்றழைக்கபப்ட்ட இராமாசி ஈரோட்டைச் சார்ந்த் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை தனது சினிமா விற்பனைக்கு பய்ன்படுத்தியுள்ள வீரமணியின் திராவிட முகமூடியை இனியாவது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Exit mobile version