Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியாரின் சொத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும்- வழக்கறிஞர் துரைசாமி.

பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே. ராமசாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன, பெரியாருக்குப் பின்னர் இச்சொத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணியும் அவரது மனைவி மக்களும் அனுபவித்து திராவிடர் கழகத்தையே குடும்பச் சொத்தாக மாற்றி விட்டார்கள். இருவருக்கும் ஒரே குணமாக ஒத்துப் போனதால் கருணாநிதியோடு கூட்டு சேர்ந்து கொண்டு கி,.வீரமணி சொத்துக்களை தனியருக்கு விற்பனை செய்ய முயன்று வருகிறார். இந்நிலையில் பெரியாருடன் நெருக்கமாக பழகியவரும் அவருக்கு வழக்கறிஞராக இருந்தவருமான வழக்கறிஞர் துரைசாமி இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் ” கடந்த 1970ஆம் ஆண்டு முதல் பெரியாரின் மறைவு வரை அவரது வழக்கறிஞராக பணியாற்றினேன். பெரியாரின் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். பெரியார் தனது சொத்துக்களை தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது எந்த நிறுவனத்துக்கோ வழங்குமாறு அவர் உயில் எழுதவில்லை.இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் தனது சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்காமல் போய்விட்டால், அவர்களுக்கு யாரும் வாரிசு இல்லையென்று சொன்னால், அந்தச் சொத்துக்கள் அனைத்தும் அரசுக்கு சேர்ந்து விடும் என்று சட்டம் மிகத் தெளிவாக சொல்கிறது. ஆகவே அந்தப் பிரிவை பயன்படுத்தி, அரசு பெரியாரின் சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரியாரின் சொத்துக்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்றும், பெரியாரின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். பெரியாரின் சொத்துக்களை ஏற்க அரசு முன்வராவிட்டால் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவேன் என்றார்.

Exit mobile version