Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெண் போராளிகள் கோரமான பாலியல், சமூக ஒடுக்குமுறைகளைக் கூறிக் கண்ணீர் வடிக்கிறார்கள்! : காணொளி

war-crime-evidence‘இன்றைக்கு ஒராள், நாளைக்கு ஒராள் என்று நாயிலும் கேவலமான பாலியல் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். என்னை நாயைப் போல நடத்துகிறார்கள். வாழ்கை என்பது ஒருவருடன் மட்டும் என்பது தான் எனக்குத் தெரிந்தது….’ கண்ணீரோடு தான் அனுபவிக்கும் கொடுமைகளைக் கூறிக் கண்ணீர் வடிக்கிறார் ஒரு போராளி..
முன்னைநாள் பெண்போராளிகள் தமது வீரம் செறிந்த போராட்டங்கள் குறித்தும் இன்றைய அவலங்கள் குறித்தும் பேசுகிறார்கள். இன்று அவர்கள் சந்திக்கும் சமூக ஒடுக்குமுறை கோரத்தால் கண்ணீர் வடிக்கிறார்கள். நெஞ்சை உருக்கும் அவலத்தினுள் அவர்கள் வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த அவலம் வியாபாரப் பொருளாக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்டு மறு வாழ்வு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இலங்கை இராணுவ சர்வாதிகாரத்தின் கொடூரம் குறித்துப் முறையிடுகிறார்கள்.
புலிகளுக்கு ஏகோபித்த ஆதரவு வழங்கியதாகக் கூறப்பட்ட சமூகம் இன்று பெண்போராளிகளை மனித உயிர்களாகக் கூட மதிப்பதில்லை என்ற அவலத்தை விபரிக்கிறார்கள்.

Exit mobile version