Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெண்களுக்கு உரிமை இல்லை : சௌதியில் ஆர்ப்பாட்டம்

புதிய சட்டங்கள் குறித்து சவுதி அரேபிய மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 30 பெண்களை அந்த நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். மன்னர் அப்துல்லாவின் இந்த முடிவிற்கு எதிராக இன்று சவுதி அரேபிய தலை நகரில் இஸ்லாமிய மதகுருக்கள் போராட்டம் நடத்தினர். இதுவரை ஆண்கள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்பட்ட ஷூரா என்ற இந்த ஆலோசனைக் குழுவில் பெண்களை இணைத்துக்கொள்வது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆண் ஒருவரின் அனுமதி இன்றி சௌதி அரேபிய பெண்கள் எந்த முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இந்த நிலையில் சௌதி அரேபியாவின் பெண்கள் முடிவெடுக்கும் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிப்பது அனுமதிக்க முடியாதது என மத குருக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version