19.01.2009.
வட மேற்கு பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கும் தாலிபான் கிளர்சியாளர்கள் ஸ்வாட் மாவட்டத்தில் மேலும் ஐந்து பள்ளிகளை வெடித்து தகர்த்துள்ளனர்.
அழிக்கப்பட்ட பள்ளிக் கூடங்களில் மூன்று ஆண்கள் பள்ளிகளும் அடங்கும்.
மழைக்கால விடுமுறைக்குப் பிறகு அரசால் நடத்தப்படும் பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மார்ச் மாதம் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் ஷேர்ரி ரெஹ்மான் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
கிளர்சியாளர்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, இனி தாங்கள் பெண்குழந்தைகளை கல்வி வழங்க மாட்டோம் என்று ஸ்வாட் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் அறிவித்திருந்தன.
BBC.