பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் சரக்கு வாகனங்கள் இயங்காததால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
லாரி, மினி லாரி, டெம்போ, வேன்கள் டீசல் கிடைக்காததால் பெட்ரோல் பங்குகளில் காத்து கிடக்கின்றன.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருவதும், அங்கிருந்து காய்கறிகளை சென்னையின் பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
மீன் பாடி வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும், டிரை சைக்கிள்களிலும் காய்கறிகள் எடுத்துச் செல்ல வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.