Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பூமியை ஒத்த இரு கோள்கள் மோதியதற்கு சான்றாக விளங்கும் நட்சத்திர தூசுகள் : அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

23.09.2008.

அண்டவெளியில் பொது ஈர்ப்பு மையத்தைக் கொண்ட இரட்டை நட்சத்திர முறைமையொன்றை சுற்றி பாரிய தூசுப் படலங்கள் வலம் வருவது அவதானிக்கப்பட்டதாகவும். அவை பூமியையொத்த இரு கோள்கள் ஒன்றுடன்

ஒன்று மோதியதில் ஏற்பட்ட மிக மோசமான சிதைவால் உருவாகியவையாக இருக்கலாம் என தாம் கருதுவதாகவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியும் வெள்ளிக் கிரகமும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவடையும் பட்சத்தில் உருவாகும் பாரிய தூசுப் படலத்தை ஒத்ததாக இது உள்ளதென மேற்படி ஆய்வில் பங்கேற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பென்ஜமின் சுக்கெர்மன் தெரிவித்தார்.

மேற்படி நட்சத்திர தூசுக்களானது, பூமியிலிருந்து 20,307,300 ஒளியாண்டுகளுக்கு அதிகமான தூரத்தில் மேஷ நட்சத்திரத் தொகுதியிலுள்ள நட்சத்திரத்தை சுற்றியே இந்த தூசு காணப்படுவது கண்டறியப்பட்டதாக மேற்படி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு ஒளியாண்டானது ஒரு வருடத்தில் ஒளி பயணிக்கும் தூரமான 6 திரில்லியன் மைல்களுக்கு சமமாகும்.

Exit mobile version