பூப்புனித நீராட்டு விழா – புலம்பெயர் நாடுகளின் பின் தங்கிய கலாச்சாரம் (காணொளி)
இனியொரு...
தமிழ் பெற்றோர் தமது பெண்குழந்தைகளுக்கு முதல்தடவையாக மாதவிடாய் ஏற்படும் போது அதனை மாபெரும் களியாட்ட விழாவாகக் கொண்டாடுவது வழமை. புலம் பெயர் நாடுகளில் இவ்விழாக்களை உலங்கு வானூர்திகளில் கொண்டாடும் அளவிற்கு ஊதாரித்தனம் வளர்ச்சியடைந்துள்ளது. இதனைச் சுற்றி புலம்பெயர் நாடுகளில் ஒரு வகையான கலாச்சாரம் வளர்க்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழ்ப் பெற்றோர்கள் தமது நிலப்பிரப்புத்துவப் பிற்போக்குக் கலாச்சார விழுமியங்களைப் பேணுவதற்காக நவீனத்துவ வசதிகளையும் பண வெறியையும் தாம் வாழும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடன்வாங்கிக் கொண்டு இந்த விழக்களை நடத்துவதற்கு எதிரான உணர்வு இளைஞர்கள் மத்தியில் சிறிய அளவிலாவது ஏற்படுகிறது என்பதற்கு கீழ்வரும் காணொளி உதாரணம்.