இதுவரை காலமும் இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்வு ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற்று வந்தது. ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்வின் சமூகப்பங்கு அரசியல் குறித்த பல விவாதங்கள் தோன்றின. நாற்பதாவது சந்திப்பை எட்டியுள்ள நிலையில் இக்குழுவின் அமைப்பாளர்கள் இரண்டாகப் பிளவுண்டுள்ளனர். ஒரு சாரார் இலங்கையில் இயல்பு நிலை காணப்படுவதால் அங்கே சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என்ற கருத்துக்கொண்ட ஒரு சாராருக்கு எதிராக லண்டனில் இச்சந்திப்பு நிகழ்கிறது. இவ்விருசாராருக்கும் இடையேயான முரண்பாடுகள் தனி நபர் முரண்பாடு என்பதற்கு அப்பால் கருத்தியல் முரண்பாடாகவே காணப்படுவதாகத் தகவலறிந்ததவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.