இவ்விடயம் குறித்து சாவேஷ் மேலும் தெரிவிக்கையில் கடல்மார்க்கமாக ஆயுதங்களுடன் அமெரிக்க படைவீரர்கள் 3000 பேர் ஹெய்டியை வந்தடைந்துள்ளதாக நான் செய்திகள் மூலம் அறிந்துள்ளேன்.கடவுளே, அங்கு ஆயுதப்பற்றாக்குறை எதுவும் இல்லை.அதற்குரிய தேவையும் தற்பொழுது இல்லை.மாறாக மருத்துவர்கள்,மருந்துகள்,உணவு,தளவைத்தியசாலைகள்,நீர் போன்ற அடிப்படைத் தேவைகளே தற்பொழுது ஹெய்டிக்குத் தேவையாக உள்ளது.
இந்நிலையில் இவ்வாறான பொருட்களைத்தான் அமெரிக்கா ஹெய்டிக்கு அனுப்பவேண்டும்.மாறாக ஆயுதத்தையும் படையினரையும் அனுப்பி மோதல் நடவடிக்கையிலா ஈடுபடப் போகின்றது. இதன்மூலம் ஆக்கிரமிப்பில் ஈடுபடவே அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக அமெரிக்க படையினரை வீதிகளில் காணமுடியவில்லை.அவர்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துகின்றனரா?அல்லது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனரா? நீங்கள் அமெரிக்கப் படைகளை வீதிகளில் காணமுடியாது.
நானும் அவர்களை ஹெய்டியில் காணவில்லை.அவ்வாறெனில் அவர்கள் எங்கே?
ஹெய்டியின் மின் உற்பத்தி வாகனம் ஆகிய தேவைக்குரிய எரிபொருளை அனுப்ப வெனிசுலா உறுதியளிக்கின்றது.
அமெரிக்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேய உதவிகளை நான் எந்தவிதத்திலும் குறைகூறவில்லை.
ஆனால், இச்சந்தர்ப்பத்தில் அதிக எண்ணிக்கையான துருப்புக்களை ஆயுதங்களுடன் ஹெய்டிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியம் என்ன? எனவும் தனது வாராந்த தொலைக்காட்சி உரையில் சாவேஷ் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள்,அடிப்படைத்தேவை நிவர்த்தி பொருட்கள்,இராணுவத்தினர்களுடன் ரஷ்ய விமானங்கள் ஹெய்டிக்கு புறப்படத் தயாராக உள்ளது.