விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து 2010ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி மத்திய அரசும், மே 17ஆம் தேதி தமிழக அரசும் உத்தரவிட்டன.
இந்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் எலிபி தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். ”இந்த வழக்கில் அரசு தனது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.