இங்கு ஈ.பிஆர்.எல்.எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் 80 களின் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அரசியலுக்குள் நுளைந்தவை. தேசிய விடுதலைப் போராட்டத்தின் எச்ச சொச்சங்களை அழித்தொழிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் இன்னொமொரு சதியே இக் கட்சிகள் ஓரம்கட்டப்பட்டு அழிக்கப்படுவது என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்துள்ளன.
எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் வாதிகள் பிழைப்புவாத அரசியலில் கூட ஈடுபடமுடியாமல் ஒரம்கட்டப்பட்டு அழிக்கப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமே அரசியல் நடத்திய 80 களின் முற்பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
சாரிசாரியாக மனிதர்களைப் படுகொலைசெய்து புலிகள் அழிக்கப்பட, சம்பந்தனை ‘சாணக்கியப்படுத்தி’ தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களை இந்தியா அழிக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன