Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புளொட் அமைப்பின் முன்னை நாள் மத்திய குழு உறுப்பினரும் அரசியல் செயற்பாட்டாளருமான குமரன் பிரான்சில் காலமானார் 

memoryகாந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளரும், புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான குமரன் என்று அழைக்கப்படும் விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் இன்று மதியம் பிரான்சில் காலமானார்.
கடந்த ஓராண்டு காலமாக சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்துவந்த இவர் யூலை 13, 2013 இல் பிரான்ஸ் சென் லூயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இடதுசாரி செயற்பாட்டாளரும், காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் காந்தியம் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – (PLOTE) அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான இவர் குமரன் என கழகத் தோழர்களால் அறியப்பட்டு இருந்தார்.

தமிழீமிழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயிரம் ஆயிரமாக உறுப்பினர்களை உள்வாங்கிய அக்காலப் பகுதியில் தளநிர்வாகப் பொறுப்பும் குமரனிடம் வழங்கப்பட்டு இருந்தது. யாழ் மாதகல் பகுதியைச் சேர்ந்த இவர் தளத்தில் இருந்து பின் தளமான இந்தியாவுக்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கும் பொறுப்பாக இருந்தவர். அதனால் ஓட்டி குமரன் என்றும் அறியப்பட்டவர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டு உறுப்பினர்கள் வெளியேறிய போது குமரன் தமிழீழ விடுதலை இயக்கதில் கொலைகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான உட்கட்சிப் போராட்டத்தில் குமரன் வெளியேறினார். மக்கள் சார்ந்த கட்சியோ செயல்பாட்டுத்தளமோ அற்றுப் போயிருந்த நிலையில் குமரன் உதிரியான அரசியல் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டார். குமரனுக்கு இனியொரு… வின் அஞ்சலிகள்.

Exit mobile version