Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புளூஸ்டார் தாக்குதலில் இந்தியாவுக்கு உதவி, இங்கிலாந்து ஒப்புதல் : கொலைகளின் சூத்திரதாரிகள்

temple1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸின் பொற்கோயில் மீது சீக்கிய போராளிகளுக்கு எதிராக இந்திய அரசு நடத்திய தாக்குதலுக்கு புளூ ஸ்டார் எனப் பெயரிடப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் பிரித்தானிய அரசின் பங்களிப்பும் இருந்தகாக அண்மையில் பிரித்தானிய ஆவணக் காப்பகத்திலிருந்து வெளியான ஆவணங்கள் சில தெரிவித்த்தன. 30 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளியிடப்படும் இந்த ஆவணங்களில் பல அரச தகவல்கள் வெளியாவதுண்டும் அந்த வகையில் இந்த 2014இன் ஆரம்பத்தில் வெளியான ஆவணங்களில் இத் தகவல் வெளியானது. புளூஸ்டார் தாக்குதலின் போது பிரித்தானியா மனித உரிமைக்காகக் குரல்கொடுத்ததை 30 வருடங்களாக நம்பியிருந்த புலம் பெயர்ந்த சீக்கியர்களுக்கு இந்த ஆவணம் அதிர்ச்சியைத் தந்தது.

பிரதமர் டேவிட் கமரனின் சார்ந்த பழமைவாதக் கட்சியின் பிரதமர் மாக்ரெட் தட்சர் ஆட்சிசெய்த 1984 ஆம் ஆண்டில் பிரித்தானியா இந்திய அரசின் கொலைகளுக்கு உதவியதாக வெளியான செய்திகளை அடுத்து பலத்த எதிர்ப்புக்கள் ஆங்காங்கு எழுந்தன.

நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் பலியான இத்தாக்குதல் 1984 இன் சிறிய முள்ளிவாய்க்கால் போன்று அமைந்திருந்து. அதன் பின்னான அமெரிக்க பிரித்தானிய அரசுகளின் தலையீடுகள் இன்றைய சூழலை நினைவு படுத்துகின்றன.

இன்றைய அரசை விசாரணை செய்து உண்மையை ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹக் இன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டார். பொற்கோயில் மீது நடத்தப்பட்ட புளூ ஸ்டார் தாக்குதலில் பிரித்தானியாவிற்கு ஆலோசனை வழங்குதல் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச பங்களிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டார்.

வில்லியம் ஹக் பாராளுமன்றத்தில் கூறுகையில், ‘இந்திய அரசாங்கத்திடமிருந்து அவசர வேண்டுகோள் எமக்குக் கிடைத்தது. பொற்கோயில் வளாகத்தில் தாக்குதல் நடத்துவதற்கான கள நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குமாறு அந்த வேண்டுகோள் அமைந்தது. பெப்ருவரி 7 ஆம் திகதிக்கும் 17 ஆம் திகதிக்கும் இடையே இந்தியாவிற்குப் பயணம் செய்த இராணுவ ஆலோசகர் இந்திய உளவுத்துறைக்குத் தாக்குதல் தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.

பிரித்தானிய வெளிவிகாரச் செயலாளர் பிரித்தானியாவின் ஆலோசனை அழிவுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் அமைந்தது எனவும் அரசியல் தீர்வையே பிரதானமாக முன் மொழிந்தது என்றும் நியாப்படுத்துகிறார்.பொற்கோவில் மீதான இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்ற அந்த ஆலோசகர், தாக்குதல் நடவடிக்கை என்பது கடைசி நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும், அதுவும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் என வில்லியம் ஹேக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 அரசியல் தீர்வை வலியுறுத்த ஏன் இராணுவ அதிகாரி இந்தியா சென்றிருக்க வேண்டும். அப்படியே அழிவுகளை மட்டுப்படுத்துவதானால் 30 வருடங்களாக இந்த நடவடிக்கை மறைக்கப்பட்டதன் காரணம் என்ன என்ற கேள்விகள் வில்லியம் ஹக் அறிக்கையின் நம்பகத் தன்மையைக் கேளிவியெழுப்புகின்றன.

இத் தகவல்களை தாக்குதலைத் தலைமை தாங்கிய இராணுவ அதிகாரி மறுத்திருந்ததார். தாகுதலின் திட்டமிடலில் இந்திய இராணுவத்திற்குத் தெரியாமல் SAS உடன் இணைந்து இந்திய உளவுத்துறை – Research and Analysis wing (RAW) – திட்டமிட்டிருக்கலாம் என்ற தகவலை ஹிந்துஸ்தான் ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. ரோ (RAW) இன் உப பிரிவான இரகசியக் குழு -the secret Special Group (SG)- பொற்கோவில் பகுதிக்குச் சென்றதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஆபரேஷன் ப்ளூஸ்டார் நவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் தனக்கு எந்த ஆலோசனையும் கிடைக்கப்பெறவில்லை என்று  கூறினார்.

SAS தொடர்பை பிரித்தனியா இரகசியமாகப் பேணவேண்டும் என்று கோரியதன் அடிப்படையில் ரோ உறுப்பினர்கள் இத்தொடர்பை இரகசியமாகப் பேணுவதற்கு அமர்த்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இலங்கையில் தமிழ்ப் போராளிக் குழுக்களான LTTE, TELO, EROS, EPRLF போன்றன 1983 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்திய இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டன. பயிற்சி பெற்றவர்களின் நேரடிச் சாட்சிகளின் அடிப்படையில் ரோ அமைப்பைச் சார்ந்தவர்களே பயிற்சியை வழங்கினர். இராணுவத்தின் செயற்பாடுகளிலிருந்து இரகசியத்தைப் பேணுவதற்காகவே ஒரு சில உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் ஊடாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன என்பது அவதானிக்கத்தக்கது.

இந்திய உளவுத்துறையால் 80 களின் இறுதியிலேயே சீர்குலைக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்களை அழிப்பதில் முடிந்து போனது.

இதுவரை இலங்கிலந்து அரசின் ஆதரவுக் குழுக்கள் போன்று செயற்பட்ட சீக்கியர்களின் தேசியவாதக் குழுக்களுக்குப் புதிய தகவல்கள் அதிர்ச்சியக் கொடுத்துள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பார்காஷ் சிங் இத்தகவல்கள் தமக்கு அதிர்ச்சி தருவதாகக் குறிப்பிடுகிறார்.

1984 ஆம் ஆண்டு சீக்கியர்களின் பொற்கோயில் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்தி படுகொலைகளை நிகழத்திய சம்பவத்தை பிரித்தானிய அரசின் SAS படையுடன் இணைந்து இந்திய உளவுத்துறையான ரோ திட்டமிட்டது.

Exit mobile version