முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அலகபெரும இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, எதிர்பார்த்தது போல புலி நாடகத்தை இலங்கை அரச பாசிஸ்டுக்கள் ஆரம்பித்துவிட்டனர்.
1999 ஆம் ஆண்டு தேர்தலுக்குச் சற்று முன்பதாக சந்திரிக்கா குமாரணதுங்கவின் பிரச்சார மேடையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சந்திரிக்கா ஒரு கண்ணை இழந்தார். இத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சந்திரிக்காவின் மாபியா வலயமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், தற்செயலாகவே சந்திரிக்கா ஒரு கண்ணை இழந்தார் என்றும் ராவய ஆசிரியர்களில் ஒருவரான விடர் ஐவன் எழுதிய நூலில் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மகிந்த கும்பல் தற்கொலைத் தாக்குதல் பாணியிலான குண்டுத் தாக்குதல் ஒன்றைத் திட்டமிடலாம் என்ற அச்சம் நிலவுவதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர, கட்சி தாவமலிருப்பதற்காக ஒரு பில்லியன் ரூபா வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிந்த கும்பல் வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.