தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறை அதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையின் சப்பல் வாட் மற்றும் எல் மண்டபம் ஆகியவற்றில் விசேட அதிரடிப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை முடிந்து இரண்டொரு நிமிடங்களில் கலவரத்தை தூண்டிவிட்டவர்களை கண்டறிவதற்காக விசேட அதிரடிப் படையினருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது அவ்விடத்துக்கு முச்சக்கர வண்டியும் வேனும் எவ்வாறு வந்தன என்பதையிட்டும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் இந்த முயற்சிகள் தோல்வி கண்டன. கலவரத்தில் தப்பி சென்றவர்களில் ஏழு பேர் பொலிஸி;ல் சரணடைந்துள்ளனர். அத்துடன் தப்பிச் சென்றவர்கைள தேடும் நடவடிக்கைகளை பொரளை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. எல் மண்டபத்திலிருந்த கைதிகள் சுவரில் ஒரு தூவாரத்தையிட்டு அதனூடாக தப்பி போனதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதுவே ஆயுத மோதலுக்கு வழிவகுத்துள்ளது என கூறப்படுகின்றனது. இங்கிருந்து கடுங் குற்றமிழைத்த பலர் தப்பி சென்றுள்ளனர். அதே சமயம் இவர்கள் றைபில் ரக துப்பாகிகள் 82யையும் அரை தன்னியக்க துப்பாக்கிகளையும் கைப்பற்றினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.