Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலி உறுப்பினர் சயனைட்டுகளுடன் தமிழ் நாட்டில் கைது: மகிந்தவை ஆட்சிபீடமேற்றச் சதி?

krishnaumarமதுரையில் இருந்து ராம நாதபுரம் செல்லும் சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராம நாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.
சசிகுமார் என்பவர் காரை ஓட்டி வந்தார். காருக்குள் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் கிருஷ்ணகுமார் (39) இன்னொருவர் பெயர் ராஜேந்திரன் (44) என்பது தெரிய வந்தது. 2 பேரின் உடமைகளையும் போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது கிருஷ்ணகுமார் வைத்திருந்த பையில், 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் சயனைடு, 4 ஜி.பி.எஸ். கருவிகள், 8 செல் போன்கள் ஆகியவை இருந்தன.

42, ஆயிரத்து 200 ரூபாய் இந்தியன் கரன்சியும் 19 ஆயிரத்து 300 ரூபாய் இலங்கை கரன்சியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார்,

கிருஷணகுமாரை தனிமைப் படுத்தி அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப்புலி என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதி காரிகள், கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இவர்கள் அனைவரும் கிருஷ்ண குமாரிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார் கள். ரகசிய இடத்தில் வைத்து கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள அலவெட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ண குமார் கடந்த 1990-ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர், அவருடனேயே நீண்ட நாட்கள் ஒன்றாகவே இயக்க பணிகளில் ஈடுபட்டு வந்துள் ளார்.

இறுதிக்கட்ட போர் நடந்த போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பலர் அணி அணியாகவும், தன்னந் தனியாகவும் இலங்கையை விட்டு வெளியேறினர். அப்போது தான் கிருஷ்ண குமாரும் தமிழகத்துக்கு வந்துள்ளார்.

திருச்சியில் கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட் பட்ட பகுதியில், அவர் தங்கி இருந்து வந்துள்ளார். அகதிகள் முகாமில் தங்காமல் வெளியிலேயே வாடகை வீட்டில் கிருஷ்ணகுமார் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு திருச்சியில் இருந்து புறப்பட்ட அவர் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலமாக ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது தான் போலீசில் சிக்கிக் கொண்டார்.

இதை யடுத்து கிருஷ்ணகுமாரை கைது செய்துள்ள போலீசார் அவரை சிறப்பு அகதிகள் முகாமில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகுமார் கடல் மார்க்கமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டு செயல் பட்டுள்ளார். 75 சயனைடு குப்பிகள் மற்றும் சயனைடு பொட்டலங்களுடன் அவர் இலங்கைக்கு செல்ல முயற்சி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ண குமாருக்கு உதவி கள் செய்த குற்றத்துக்காக டிரைவர் சசிகுமார், ராஜேந் திரன் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் உயிர்த்துவிடுவார்கள் எனக் கூறியே மகிந்த ராஜபக்ச வாக்குப் பொறுக்க ஆரம்பித்துள்ளார். தவிர புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசிய வியாபாரிகளின் பிழைப்பு மகிந்த ஆட்சிக்கு வந்தாலே இலகுவாக நடைபெறும்.

இதனால் புலம்பெயர் நாடுகளிலுள்ள வியாபாரிகள் மற்றும் மகிந்த ஆகியோரின் இணைவில் போராளிகளையும் மக்களையும் பலியாக்கி மகிந்தவை ஆட்சிபீடமேற்றும் சதித்திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகங்கள் நியாயமானவையே. அதுவும் தேர்தலை அண்மித்த காலத்தில் தாக்குதல்களுக்குத் திட்டமிடுவது என்பது மகிந்தவை ஆட்சிபீடமேற்றுவதற்குரிய முயற்சியே தவிர வேறில்லை.

Exit mobile version