புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அளவிலான அமைப்புக்கள் மகிந்த ரஜபக்ச அரசுடன் இணைந்து செயற்படுவதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் எதிர்வரும் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புக்களூடாக முன்னெடுக்கபடுவதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்த போது இந்த திட்டம் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளது.