அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் என்ற இரு வேறான அமைப்புக்களின் கட்டுப்பாடுகளுள் இயங்கும் முன்னை நாள் புலி ஆதரவு அமைப்புக்களிடையேயான முறுகல்கள் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரியவருகிறது. சிலதினங்களுக்கு முன்னர் கொவன்றி பகுதியில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதன் நேரடியான வெளிப்பாடுகள் தென்பட்டதாகத் தெரியவருகிறது. இதன் பின்னணியில் புலிகள் அமைப்பின் பண முதலீட்டு விவகாரங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகிறது. வருடாவருடம் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகள் இரண்டு பகுதிகளும் தனித் தனியாக நடத்தவும் தீர்மானித்துள்ளன. கே.பி மற்றும் இலங்கை இந்திய உளவுத் துறைகளின் பங்கும் இதன் பின்னணியில் காணப்படுவதாகவும் பரவலாகக் கருத்து நிலவுகிறது.
எது எவ்வாறாயினும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்ட உணர்வுகொண்ட புலம் பெயர் தமிழ்ப் பேசும் மக்களை விரக்திக்குள்ளாக்கும் அரசியல் வியாபாரிகளின் இந்த மோதல்கள் அபாயகரமானவை.
இவ்வேளை மக்களை சரியான திசைவழியை நோக்கி நகர்த்துவது தமிப்பேசும் மக்களது நலனில் அக்கறையுள்ள அனைவரதும் கடமையாகும்