தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தலை தூக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும், புலிகளை அரச படையினர் முற்றாக இல்லதொழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சில புலி ஆதரவு நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் புலிகள் மீதான தடையை நீடித்துள்ளது.
எனினும், விடுதலைப் புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வாய்ப்பு இல்லை எனவும், முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை இந்தியா மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.
யுத்த காலத்தில் தமிழகத்திற்குள் ஊடுறுவிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.