Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் தாம் தோல்வியடையலாம் என 2006 இலேயே அறிந்திருந்தனர்

விக்கிலீக்ஸின் நோர்வேஜியன் கேபிள்களில் ஒன்றில் தாம் இலங்கை ஆயுதப்படைகளை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நோர்வேயிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே 2006ம் ஆண்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளதாக நோர்வே அரசின் ஏனைய நட்பு நாடுகளுடனான தொடர்பாடல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதரீதியாகப் புலிகள் பலம் பெற்றிருந்தனர் என்ற காலப்பகுதியிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தவிர,இதே காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களாகக் கருதப்பட்ட தமிழ்ச்செல்வன், சூசை, பொட்டம்மான் போன்றோர் தமது பெயர்களில் ஐரோப்பிய அமரிக்க நாடுகளிலும் மலேசியாவிலும் சொத்துக்களை வாங்கியிருந்ததாக புலிகள் இயக்கத்தின் மலேசிய முக்கியஸ்தர் ஒருவரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version