2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் நிதிக் கொடுக்கல் வாங்கல் வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடும் என்ற அச்சம் காரணமாக தொடர்ந்தும் அரசாங்கம் வடக்கில் பாரியளவில் படையினரை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, அண்மையில் தெய்வீகன், கோபி, அப்பன் ஆகியோரைக் கொலைசெய்து இலங்கை இராணுவம் வடக்கையும் கிழைக்கையும் மேலும் அதிகமாக இராணுவமயப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் இந்திய உளவுத்துறையின் செயல் இருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகின. உலகத்தின் ஒவ்வொரு மூலையையும் கண்காணிக்கும் அமெரிக்க அரசிற்கு இந்த நாடகம் குறித்து தெரியாமலிருக்க வாய்ப்புக்கள் இல்லை. மேலும் பெரும்பாலான தமிழ் அரசியல் தலைமைகள் அமெரிக்க அரசின் உளவுப்படைகள் போன்றே செயற்படும் நிலையில் இலங்கை அரசின் புலி நாடகம் தொடர்பாக அமெரிக்க அரசிற்கு தெளிவான தகவல்கள் கிடைத்திருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமற்றது. ஆக, புலம்பெயர் நாடுகளிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்களைக் கைது செய்யவும், வட-கிழக்கை இராணுவமயப்படுத்தவும் அமெரிக்க இந்திய இலங்கை அரசுகளின் கூட்டுச் சதியே புலி உருவாக்கம் என்பது தெளிவாகிறது.