Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளை விரட்டியடித்திருக்கலாம். ஆனால் இந்தியாவை விரட்ட முடியாது : அநுரகுமார

சம்பூரிலிருந்து புலிகளை விரட்டியடித்திருக்கலாம். ஆனால் இந்தியாவை விரட்ட முடியாது என ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற குழுத் தலைவரான அநுரகுமார திஸநாயக்கா கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர் மாநாட்டில் பேசிய அநுரகுமார திஸநாயக்கா, சம்பூரிலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் இங்கு பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களும் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்கள்: அவர்கள் தற்போது ஐந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அந்த மக்கள் வாழ்ந்த பகுதி பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு அகதிமுகாம்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் வாழுமாறு அரசாங்கமும் வலியுறுத்தி வருகிறது. அராசங்கத்திற்கு சேவை செய்கின்ற கருணாவும் வலியுறத்தி வருகின்றார். த.தே.கூட்டமைப்பு தமது இந்திய விசுவாசம் காரணமாக இது பேற்றிப் பேசுவதில்லை. பரம்பரையாக வாழ்ந்து வந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தங்களை மீண்டும் தமது சொந்தக் கிராமங்களில் குடியேறி வாழ அனுமதிக்க வேண்டும் என்று அமைதியான முறையில் தொடர்ந்தும் கூறிவருகின்றார்கள்.

Exit mobile version