விடுதலைப் புலிகளை விமர்சித்துள்ள கருணாநிதி ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்னம், அமிர்தலிங்கம் உள்பட பல அரசியல் தலைவர்களைக் கொலைசெய்தமை தவறானது என்கிறார்.
இலங்கையில் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டமை ஒரு அவசர முடிவாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதன் விளைவு, விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்திருந்த ரணில் விக்கிரமசிங்கவை மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க உதவியது என்று தெரிவித்த கருணாநிதி, அதிலிருந்து பேச்சுவார்த்தை முடக்கப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளார்.
பகிஷ்கரிப்பு கோரிக்கையை அடுத்து 7 லட்சம் தமிழர்கள் முற்றாக வாக்களிக்காத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரணில், விக்கிரமசிங்கவை 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குளால் வெற்றி பெற்றார். அன்றைய அவசர முடிவின் இன்றைய விளைவு என்ன? இன்று இலங்கை இராணுவத்தினால் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டுவது போல் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.