Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளை விட முஸ்லீம்கள் ஆபத்தனவர்கள் : பொதுபல சேனாவின் பிரித்தாளும் சுழ்ச்சி

BBS

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களை விடவும் அதிகளவு இழப்புக்கள் முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் ஊடாக ஏற்படக் கூடுமென பொதுபல சேனா இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் விதாரான்தெனிய நந்த தேரோ தெரிவித்தார். முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தை இலங்கையில் நடைமுறப்படுத்த முனவைவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரச பாசிஸ்ட் கோத்தாபய ராஜபக்ச இன் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் பணம் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பொது பல சேனா, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை உறுதிப்படுத்த இலங்கை அரசிற்குத் துணை செல்கிறது.

இது தொடர்பாக முஸ்லிம் தமிழர்களும் வடக்குக் கிழக்குத் தமிழர்களும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
இதற்காகவே அந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசிற்கும் பொதுபல சேனா போன்ற நாசிகளுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்டம் மட்டுமே இவர்களை அரங்கிலிருந்து அகற்றும்.

Exit mobile version