இந்திய இராணுவம் இலங்கையை ஆக்கிரமித்த 80 களின் இறுதிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசின் அன்றைய ஜானதிபதி ரனசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கினார். இந்திய ஆக்கிரமிப்பை அகற்றுவேன் என்று பிரச்சாரம் மேற்கொண்டே பதவிக்கு வந்த பிரேமதாச இந்திய அரசிற்கு எதிராகப் போராடுவதற்காகப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்.
அதே காலப்பகுதியில் பிரித்தானிய அரசு ஜே.வி..பி ஐ அழிப்பதற்காக தியத்தலாவை இராணுவ முகாமை மையமாகக்கொண்டு இலங்கை அரச படைகளுக்கு பயிற்சி வழங்கியது.
இந்திய அரசிற்கு எதிராகப் ஆயுதப் போராட்டம் நடத்திய ஜே.வி.பி இன் ஆதரவாளர்கள் பிரேமதாசவினால் உள்வாங்கப்பட ஜே.வி.பி செல்வாக்கிழந்து போக பிரேமதாச அரசால் 89 ஆம் ஆண்டின் இறுதியில் ஜே.வி.பி இன் ஆயுதக் குழுக்கள் முற்றாக அழிக்கப்பட்டன.
90 ஆம் ஆண்டு புலிகளின் அலுவலகம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட்டது. பிரேமதாசவின் அன்றைய தொடர்பாளராக மாத்தையா நியமிக்கப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பின் பிரதித் தலைவராகவிருந்த மாத்தையா பின்னதாக இந்திய அரசின் உளவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டு பிரபாகரனால் கொலை செய்யப்பட்டார்.
90 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்த அலுவலகத்தில் சூசை, பதுமன் போன்றவர்களும் வலம் வந்தனர்.
இன்று பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிப் பலப்படுத்தினார் என்றும் தாம் புலிகளை அழித்தோம் என்றும் மகிந்த பரிவரங்கள் பிரச்சாரம் செய்ய புலிகளைப் பிழவுபடுத்தவே ஆயுதங்களை வழங்கினோம் என்ற பொய்யை சஜித் பிரேமதாச கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.